மதுரை வடக்கு ரோட்டரி சங்கம், ஜி.எச்.சி. எல்.அறக்கட்டளை, சுப்பம்மாள் டிரஸ்ட் சார்பாக 80 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தில் மதுரை வடக்கு ரோட்டரி சங்கம், ஜி.எச்.சி. எல்.அறக்கட்டளை, சுப்பம்மாள் டிரஸ்ட் சார்பாக இலவச கண் கண்ணாடி மற்றும் தையல் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் ஐ.ஜெரால்ட் தலைமை தாங்கினார்.
மதுரை வடக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ் .ஏ .முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.செயலாளர் பி. சுரேஷ் வரவேற்றார்.இதில் துணை கவர் னர் அமர் வோரா , வடக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.
கண் பரிசோதகர் குமார் கண் பரிசோதனை செய்த 80 பேருக்கு இலவசகண் கண்ணா டியும், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும் தலைவர் முகமது இப்ராஹிம் வழங்கினார். இதன் ஏற்பாடுகளை வடக்கு ரோட்டரி சங்கம், மற்றும் ஜி.எச்.சி.எல் அறக்கட்டளை அதிகாரிகள் ரொட்டேரியன் அசோக்குமார், சுஜின் ஆகியோர் செய்து இருந்தனர்.