Breaking News

364.ஆண்டுகளாக பழமை மாறாமல் அழகர்மலையில் அருள்பாலித்து வரும்  சுந்தராஜாபெருமாள்  தேனூர் வைகை ஆற்றில்!

மதுரை மாவட்டம் அழகர்மலையில் அருள்பாலித்து வரும் சுந்தராஜாபெருமாள் தேனூர் கிராமம் வைகையாற்றில் கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுத்த நிகழ்வு நடந்து வந்துள்ளநிலையில் மதுரை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர் சுமார் 364.ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வினை மதுரைக்கு மாற்றிதால் தற்போது வரை கள்ளழகர் வைகையாற்றி எழந்தரும் நிகழ்வு மீனாட்சி சொக்கர் திருக்கல்யாண வைபவத்துடன் இணைந்து. நடைபெற்று வருகின்றது .

இதன்பின்னர் வைகையாற்று மண்டபத்தில்.எழந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. ஜுன் 5.ல் இன்று மாலை 6.மணியளவில் வைகையாற்றில் கருடவாகனத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியும்.இரவு ராஜா அலங்காரத்தில் சுந்தராஜாபெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கு நிகழ்ச்சியும் ஜுன் 6.ல்.நாளை தேனூர் வைகை யாற்றிலிருந்து பூபல்லாக்கில் ஸ்ரீதேவி. பூதேவி சமேதமாக சுவாமி புறப்பாடாகி.வீதி உலா சென்று கோயிலை சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது..

இவ்விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன் அறங்காவலர் கௌதம்பாண்டியன். உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மேலும் இது குறித்து கோயில் தர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன் கூறியதாவது::
மண்டூக மகரிஷிக்கு சாப விமோசன கொடுக்கும் நிகழ்வு பலநூறு. ஆண்டுகளாக பழமை வாய்ந்த தேனூர் வைகையாற்றி பகவான் திருமால் கருடவாகனத்தில் சுந்தரராஜா பெருமாள் வடிவில் காட்சியளித்து பாபவிமோசம் அளித்துவந்து உள்ளார்.திருமலைநாயக்கர் மன்னர் காலத்தில் இந்நிகழ்வு மீனாட்சி திருக்கல்யாணத்துடன் இணைத்து மதுரைக்கு மாற்றப்பட்டு.

தற்போது. 364.ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.தேனூர் வைகையாற்றில் பழமை மாறாமல் தற்போது கல் மண்டபம் கட்டுபணிகள் துவங்கப்பட்டு உள்ள நிலையில் மதுரையில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு நடைபெறும் கள்ளழகர் வைபவங்களில் வசந்த விழா போன்ற ஏதேனும் ஒரு நிகழ்வினை பழமையான தேனூரில் நடத்த வேண்டும் எனவும் .தேனூர் வைகையாற்றில் மண்டூகருக்கு மோட்சம் இந்நிகழ்வு மாசி பௌர்ணமியன்று நடைபெற்று வந்து உள்ளதாக கோயில் கல்வெட்டு சான்றுகள் தெரிவிக்கின்றது என்றார்.

About neWsoFtTAmilNADu

Check Also

ராமர் கோவில் கும்பாபிஷேகம்அத்வானி வரவில்லை… காரணம் என்ன

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அத்வானி வரவில்லை… காரணம் என்ன?உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்டது. பிரதமர் …