Breaking News

25,000 அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது.சுப்பிரமணியன் சுவாமி!

பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பறக்கும் படம் போலியாம்.. சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!

டெல்லி: நவ.29

25,000 அடி உயரத்தில் கண்ணாடியை மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த விடியோக்கள் இணையத்தில் தீயாகப் பரவியது. தேஜஸ் விமானத்தில் வானில் பறந்தபோது பிரதமர் மோடி மாஸ்க்கை கழற்றிவிட்டு கை அசைத்தார். பின்னர், ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு கெத்தாக நடந்து வரும் காட்சிகளும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியின் தேஜஸ் விமான பயணம் குறித்து பதிவிட்டுள்ளார். ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுவாமியின் பதிவில், “25,000 அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி என்னிடம் கூறினார். ஏனெனில் அந்த உயரத்தில் பிரதமர் வளிமண்டல அழுத்தத்தால் தரையில் விழுந்திருப்பார். இதை பிரதமர் அலுவலகம் மறுக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.தெரிவித்துள்ளார்

About neWsoFtTAmilNADu

Check Also

மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து!

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி …