Breaking News

24 மணி நேரத்தில் இரண்டு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை! பாதுகாப்பு படை வீரரின் மனைவியும் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் பாதுகாப்பு படை வீரர்கள்!

24 மணி நேரத்தில் இரண்டு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை! பாதுகாப்பு படை வீரரின் மனைவியும் தற்கொலை சம்பவத்தால்
அதிர்ச்சியில் பாதுகாப்பு படை வீரர்கள்!
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து மனைவியும் !
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து தற்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் மகாஸ்மந்த் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (வயது 29). விண்வெளி ஆராய்ச்சி மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

நீண்ட விடுப்பில் சென்ற சிந்தாமணி கடந்த 20-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார். நேற்று பணியில் இருந்த அவர் இரவு 7.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு பேசினார்.

பின்னர் அவரிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை பிரிவினர் சிந்தாமணி பணியில் இருந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மரத்தில் சிந்தாமணி தூக்கில் தொங்கினார்.

இந்த சம்பவத்தை அடுத்து
உ.பி.யை சேர்ந்த விகாஸ் சிங் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த விகாசிங் (வயது 30). இவர் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.
விண்வெளி ஆராய்ச்சி மைய வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேற்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வேலை செய்து கொண்டு இருந்தார்.
அதிகாலை பணி முடியும் நேரத்தில் விகாசிங் தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து நெற்றி பொட்டில் வைத்து சுட்டார்.
24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலையால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் விகாஷ் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தாங்க முடியாத மனைவி தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தற்கொலை சம்பவத்திற்கு காரணம் என்ன என்று அங்கிருக்கும் பாதுகாப்பு படை வீரர்கள் ஒரு சிலரிடம் விசாரித்ததில் ஸ்ரீ கோரிக்கோட்டாவில் பணியில் இருக்கும் எங்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை பணி சுமை அதிகமாக இருக்கும் காரணத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் இருப்பவரிடம் சிறிது நேரம் கூட சந்தோசமாக சிரித்து பேசி இருக்க முடியவில்லை என்றும் இதற்கெல்லாம் காரணம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் உயர் அதிகாரிகள் தான் என்றும் உயர் அதிகாரிகளுக்கும் மனைவி குழந்தைகள் இருப்பதை மறந்து அவர்களுக்கு கீழ் பணி புரியும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் பணி செய்ய சொல்வதால் வீரர்கள் மன உளைச்சலில் இதுபோன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று மனவேதையுடன் வேதனையுடன் தகவல் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ உயர் அதிகாரிகள் தாங்கள் கீழ் பணி புரியும் வீரர்களிடம் வாரம் ஒரு முறை அவளுடன் கலந்துரையாடல் செய்து அவர்களுக்கு மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிந்து அவர்களுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே இது போன்ற தற்கொலைகளை தடுக்க முடியும் என்று ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

About neWsoFtTAmilNADu