Breaking News

2024- பாராளுமன்ற தேர்தல் துவக்கம்!மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது!

2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பயன்பாட்டிற்காக மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாடு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள் தேனிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்தில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பாராளுமன்ற தேர்தல் பயன்பாட்டிற்காக கட்டுப்பாடு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது தேனி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், பாதுகாப்பு அறையில் வைக்கும் பணியை மேற்கொண்டனர்!

நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் 2024- ஐ முன்னிட்டு வாக்கு பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 180 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்; (control unit) திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 490 வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள் (vvpat) கொண்டுவரப்பட்டு இயந்திரங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, தேர்தல் வட்டாட்சியர் செல்வி.சுகந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …