அதிகாரத்தை இழக்கக்கூடிய பதற்றத்தில் பாஜக” –
33% மகளிர் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் இன்று கூடியிருக்கும் நிலையில், அடுத்த நான்கு நாட்களில் பிரதமர் தலைமையிலான ஆளும் பாஜக அரசு கடைசி நேரத்தில் சில விஷயங்களை செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கணிக்கின்றனர்.அடுத்த ஐந்து நாட்களுக்கு நடக்கும் கூட்டத் தொடரில் “நேர்மறையாக செயல்பட வேண்டும்” செப்டம்பர் 18 முதல் 22 வரை ஐந்து நாட்களுக்கு தவறாமல் கூட்டத் தொடருக்கு வந்து கட்சியின் நிலைப்பாட்டினை ஆதரிக்க வேண்டும்,” என பாஜக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக கட்சி கொறடா கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் முதல் நாள் கூட்டமான சம்விதான் சபாவின் தொடங்கி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு காலப் பயணம், வெற்றி மற்றும் அதன் சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள 37 மசோதாக்களில் ஐந்து மசோதாக்கள் மட்டும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது
வரும் புதன் கிழமை இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு மட்டும் உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த மசோதா விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 10 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு அவைகளிலும் இம்மசோத நிலுவையில் உள்ளது.
இதற்கு அடுத்ததாக, வழக்கறிஞர்கள்(திருத்தம்) மசோதா 2023 மற்றும் பருவ இதழ்களுக்கான பத்திரிக்கை மற்றும் பதிவுசெய்தல் மசோதா 2023 ஆகியவையும் இந்தக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு மசோதாக்களும் கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த மசோதாக்களைத் தவிர, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலக மசோதா 2023ம், இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்டுள்ளவையுடன் கூடுதல் நிகழ்ச்சி நிரல்கள் சேர்க்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், “அவர்கள் என்றைக்கும் சொன்னதைச் செய்ததே இல்லை. இந்த முறையும் சொன்னதை செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
ஆனால், தற்போது பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த மசோதாவை நிச்சயம் எதிர்ப்போம். ஆனால், அது அவர்கள் நாேக்கமாக இருக்கும் எனத் தோன்றவில்லை,” என்றார்.
மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடாளுமன்ற நெறிமுறைகள் எதையும் பாஜக அரசு கடைபிடிப்பதில்லை என்றும், நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் நிச்சயம் முன்னறிவிப்பின்றி எதேனும் மசோதா கொண்ட வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக மாணிக்கம் தாக்கூர் கூறினார்.
வழக்கறிஞரும் திமுக., நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சனும் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த மசோதாவை திமுக எதிர்க்கும் எனத் தெரிவித்தார்.
“அவர்கள் ஜனநாயகத்தை மதிப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு தனியான அமைப்பாக செயல்பட வேண்டும். ஒரு மூன்று பேர் டெல்லியில் அமர்ந்துகொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரையிலும் கூட அப்படித்தான் நடந்துள்ளது,” என்று திமுக வழக்கறிஞர் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன். கூறியுள்ளார்.
நான்கு மசோதாக்கள் தான் நிகழ்ச்சி நிரல் என்றால், அதனை முதலிலேயே வெளியிட்டிருக்கலாமே, அதனை வெளியிட எதற்கு அவ்வளவு தயக்கம் என கேள்வி எழுப்பினார் வெங்கடேசன்.
“அதிகாரத்தை இழக்கக்கூடிய பதற்றத்தை பாஜக.விடம் பார்க்க முடிகிறது. அதன் வெளிப்பாடு தான் இவை. ஜனநாயகத்தை கடைப்பிடிக்கிற நடைமுறை அவர்களிடம் இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறுகையில் சட்டத்திற்கு உட்பட்ட விஷயங்கள், மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் என்றால், அதனை நாம் யூகிக்கலாம், எதிர்பார்க்கலாம். ஆனால், அவர்கள் முழுமையாக தங்கள் சுயநலன் சார்ந்து தான் செயல்படுபவர்கள்,” என்றார் .