சோழவந்தான் தனியார் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை!
அசாமில் நடைபெற்ற 2024 தேசிய பள்ளி அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரத்தில் உள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 4:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தேசிய அளவில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தைபிடித்துள்ளது. குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது .
இந்த வெற்றிக்கு
அணியின் முக்கிய வீரர்கள் யஷ்வந்த் B, அருள் பிரகாஷ் N, பிரபாகரன் S, ஜோ க்ளாட்சன் L, மற்றும் S. அனு ஸ்ரீ ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் இந்த சாதனையைசெய்துள்ளனர். இவர்களின் இந்த கடின உழைப்பால் பள்ளி பெருமை அடைந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பள்ளி வளாகத்தில் உள்ள கூடத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ் நாடு மாநில செஸ் சங்கத்தின் இணைச் செயலாளர் P. பிரகதேஷ், BE, MBA மற்றும் மதுரை மாவட்ட செஸ் சங்கத்தின் செயலாளர் P. உமா மகேஸ்வரன், IA, NI
கல்வி பள்ளி குழுமத்தின் தலைவர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் மதுரை மாவட்ட செஸ் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் மூத்த தேசிய அறபிட்டர் (SNA) M. ராஜதர்ஷினி M.E,
பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியை வாழ்த்தினர். “இந்த வெற்றி எங்கள் மாணவர்களின் திறமை மற்றும் உழைப்பின் வெளிப்பாடு,” என்று பள்ளி முதல்வர் குறிப்பிட்டார், மேலும் இவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை எட்டுவார்கள் என்றும் இவர்களால் பள்ளி பெருமையை அடைவதாகவும் தெரிவித்தார்