Breaking News

17 வயது சிறுமியை கர்பமாக்கிய‌ வாலிபர்

17 வயது சிறுமியை கர்பமாக்கிய‌ வாலிபர் !
மயிலாடுதுறை 17
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி .கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட முதலை மேடு ஊராட்சியில் பிரியா என்பவரின் மகள் கவிதா வயது 17. ( பெயர் மாற்றப்பட்டுள்ளது..)
இவர் ஆடுதுறையில்உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் இவரை பக்கத்து ஊராட்சி யான ஆலாலசுந்தரத்தில் உள்ள ரமேஷ் என்பவரின் மகன் நேதாஜி ‌வயது 23என்பவர் கவிதாவிடம் ஆசை வார்த்தைகளை கூறி தன்வசப்படுத்தி கர்பமாக்கி உள்ளார். பெண்ணிடம் உடல் ரீதியாக‌மாற்றம் தெரிந்த பெற்றோர்கள். மருத்துவ மணிக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்ததில்‌ பெண் 2மாத கர்பினியாய்இருக்கும் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்க்கு காரணம் யார் என்று பெண்ணிடம் பெற்றோர்கள் விசாரித்த போது ஆலாலசுந்தரத்தை சேரந்த நேதாஜி என்பது தெரிய வர உடனே சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையினர்‌ நேதாஜியை தேடி அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் இல்ல என்பதால் அவரது பெற்றோர்களிடம் நேதாஜி வந்தவுடன்‌ காவல் நிலையத்திற்கு அழைத்து வர வேண்டும்‌ என்று கூறிவிட்டு .பெண்ணுக்கு 17வயதுதான் ஆகிறது அதனால் இவர் நாகையில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்புவதாக கூறி அனுப்பி வைத்துள்ளனராம் ஆனால் இதுவரை நேதாஜி மீது போக்சோ‌ சட்டப்படி அவரை கைது செய்யப்படவில்லை என்றும்.இதற்கிடையில் காப்பகத்தில் இருந்த தன் மகளை கடத்தி நேதாஜிக்கு‌ திருமணம் செய்து வைத்திருப்பதாகவும். காப்பகத்தில் இருந்த‌‌ பெண் எப்படி வெளியே வந்தால் யார்.‌யார் இவர்களுக்கு உதவி செய்கிறார் கள் என்று தெரிய வில்லை என்றும் சீர்காழி யை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தலைமையில் இவ்வளவு வேலைகளும் நடந்து கொண்டு இருக்கிறது என்றும். எப்படியாவது எங்கள் மகளை காப்பாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டி கண்ணீர் மல்க‌ மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சிறுமியின் பெற்றோர்.

About neWsoFtTAmilNADu

Check Also

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் …