கொடநாடு கொள்ளை வழக்கில் புதிதாக 48 பேரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது செல்போன் நம்பரை வைத்து எந்த நிறுவனம் என்பதை கண்டுபிடிப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா உட்பட 44 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்ற நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து சிபிசிஐடி போலீஸார் தகவல் பெற வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் வழக்கை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 24 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.