ஸ்டார் பிரண்ட்ஸ் பவுண்டேஷன்மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா டி மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள ஸ்டார் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமன் முன்னிலையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமில் கலந்து கொண்ட 75 நபருக்கு கண்பரிசோதனை செய்ததில் 13நபருக்கு கண்புரை கண்டறியப்பட்டு அன்றய தினமே மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்று கண்பரை நீக்கி அறுவை சிகிச்சை செய்து கண்ணொழி பெற்று 01/02/23. புதன்கிழமை அன்று அனைவரும் நலமுடன் வீடு திரும்பினர் .
ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் Starfriendsfoundation Tmp. மற்றும் T.மீனாட்சிபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.