Breaking News

12 மணி நேரம் வேலை ! சரியா!? தவறா !?வாரத்தில் நான்கு நாட்கள் தலா 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு எடுத்தால் என்ன பிரச்சனை?

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை என்று மசோதா கொண்டுவந்தது . சரியா!? தவறா!?

2020 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை – புதிய ஊதிய கொள்கையை கொண்டு வந்து 2021 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

2021 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவரப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேறியது.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்ற கணக்கில் 6 நாட்கள் உழைத்தால் ஒரு வாரத்தில் 72 மணி நேரம் பணியாற்ற வேண்டும். அப்படியெனில் அது கொடுமைதான். நிஜமாகவே அப்படித்தான் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறதா பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்!?


1948 ஆம் வருடத்திலிருந்து வழக்கத்தில் இருக்கும் சட்டம் அப்படியே தொடர்கிறது. ஒரு தொழிலாளியிடம் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம்தான் வேலை வாங்க முடியும், அதுதான உச்சபட்சம் என்ற கணக்கில் மாற்றம் எதுவுமில்லை. பிறகு வேறு என்ன மாற்றியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆறு நாட்களில் 48 மணி நேரம் வேலை செய்வதை, தொழிலாளர் விரும்பினால் நான்கே நாட்களில் 48 மணி நேரம் பணி புரிந்து மீதமுள்ள 3 நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்ள இந்த மசோதா அனுமதிக்கிறது. அவ்வளவுதான்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இது பொருந்துமா? பொருந்தாது.
உற்பத்தி ஆலைகளில் பணியாற்றுகிறவர்களுக்கு பொருந்துமா? பொருந்தாது.
பிறகு வேறு யாருக்குத்தான் பொருந்தும் என்று தேடினால் ‘ஏ.சி.வசதியுடன் நடைபெறும் தொழில் நிறுவனங்கள் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் – அப்படிப் பார்த்தால் ஆப்பிள், டெல் கம்யூட்டர்ஸ் மாதிரியான எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொருந்தும்.

ஆப்பிள், டெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால்தானே டிப்ளமோவும், பொறியியலும் படித்துவிட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்? அவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் தலா 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு எடுத்தால் என்ன பிரச்சனை?

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை – புதிய ஊதிய கொள்கை!

2021 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை – புதிய ஊதிய கொள்கை!நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

மத்திய அரசின் புதிய ஊதிய குறியீடு கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த செய்தி பணியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தாலும் பல நன்மைகளை வழங்க உள்ளது. உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்களில் இந்த புதிய ஊதிய கொள்கை அமல்படுத்தப்பட்டு, பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது போல இந்தியாவிலும் இந்த கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது. இந்த கொள்கையின் படி தற்போது பணியாளர்களின் வேலை நேரமாக இருக்கும் 9 மணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தலாம். அவ்வாறு பணி நேரம் உயர்த்தப்பட்டால் 6 நாட்கள் செயல்பட்டு வந்த வேலை நாள் 4 நாட்களாக குறைக்கப்படும். இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வேலை நேரத்தில் 3 மணி நேரத்தை அதிகமாக பெற்றுக்கொள்ளலாம்.


மேலும் புதிய ஊதிய குறியீடு கொள்கை மூலம் ஊழியர்களுக்கு ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் இடையில் 30 நிமிடங்கள் கட்டாய இடைவெளி அளிக்க வேண்டும். முன்னதாக ஊழியர்கள் 15 அல்லது 30 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்தால் அது ஓவர் டைமாக கருதப்படும். ஆனால் இந்த கொள்கையின் அடிப்படையில் 30 நிமிடங்களுக்கு மேலாக வேலை செய்தால் மட்டுமே ஓவர் டைமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் புதிய ஊதிய கொள்கை மூலம் ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் அதிகமான தொகையை அடிப்படை சம்பளமாக கொடுக்கப்பட வேண்டும். இந்த சம்பள மாற்றத்தால் ஊழியர்களுக்கான பிஎப் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் புதிய ஊதிய குறியீடு கொள்கையை அப்படியே தமிழக அரசு நிறைவேற்றியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்ட மசோதாவால் தொழிலாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கையாகும்.

About neWsoFtTAmilNADu

Check Also

அதிமுக ஆட்சி ஊழலால் ஐடி நிறுவனத்தை மூடி
பிளாட்பார்ம் இல் தங்குறேன்..
கோடீஸ்வரரின் ரத்த கண்ணீர்

அதிமுக ஆட்சி ஊழலால் ஐடி நிறுவனத்தை மூடிபிளாட்பார்ம் இல் தங்குறேன்.. கோடீஸ்வரரின் ரத்த கண்ணீர்2016இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த …