Breaking News

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு!, பார்வையிட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.
சிவகாசி. நவ.09

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் இங்கிலீஷ் பார்ட்னர் அமைப்பு மூலம் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்று வரும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பினை பார்வையிட்ட ஆட்சியர் பேசிய போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வி அல்லது பணியிடத்திற்கு செல்லும்போது ஆங்கில மொழியினை பார்த்து பயப்படுவதை போக்கும் அடிப்படையிலும், சிறிதளவு முயற்சி செய்தால் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கிலும், மாவட்டத்தில் உள்ள 190 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு 30 நிமிடங்கள் கொண்டதாக மொத்தம் 60 நாட்கள் நடைபெறுகிறது. மாணவர்கள் ஹைடெக் லேப் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்கள் உயர்கல்வி சேர்ந்து படிக்கும் போது ஆங்கிலம் தங்கு தடை இன்றி பேச எழுத இவ்வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும்

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் பயன் – சு வெங்கடேசன் எம்பி

மதுரை மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்த மாணவர்களில் 79% பேர் பயன் – சு வெங்கடேசன் எம்பிகல்விக்கடனாக ரூ.168 கோடியை …