Breaking News

1000 கணக்கான ஏக்கர் நிலங்களில் பூமியின் மேல் பரப்பு மண்ணை 10அடி ஆழத்திற்கு தோண்டி கிரவல் என்ற பெயரில் விற்பனை ! தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?

ஆண்டிபட்டி தாலுக பகுதிகளில் குடியிருக்க வீடு இல்லாத ஏழை மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பத்தாண்டுகளாக இருபதிற்கும் மேற்பட்ட முறை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்தும், விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தி வருவதாவும்,

அரசு புறம் போக்கு நிலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தும், வீடில்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க காலம் கடத்தாமல் மனுக் கொடுத்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆண்டிபட்டி தாலுகா பகுதிகளில் 100க்கு மேற்பட்ட இடங்களில் குறிப்பாக, திம்மரசநாயக்கனூர் கிராமம்’ பிட் 1,திம்மரச நாயக்கனூர் கிழக்கு பகுதி,சின்னமலைப்பகுதி அடிவாரத்தில் துவங்கி, புள்ளிமான் கோம்பை தேவர் சிலை பகுதி, வண்ணாத்திப்பாறை பகுதி, வெண்டிநாயக்கன்பட்டி பகுதி, திம்மரசநாயக்கனூர் பிட் 2, கோவில்பட்டி பகுதி,
S.S புரம் பகுதி, கரட்டுப்பட்டி பகுதி அரப்படிதேவன்பட்டிக்கு வடக்குப்பகுதி, கருத்தமலைப்பகுதி ஆகிய பகுதிகளில் சில தனி நபர்கள் ஒரு சிலர், பட்டா இடங்களில் அனுமதி பெற்று, அரசுக்குச் சொந்தமான பஞ்சம நிலம், பூமிதான நிலம்,அரசு புறம்போக்கு நிலம்,
1000 கணக்கான ஏக்கர் நிலங்களில் பூமியின் மேல் பரப்பு மண்ணை 10அடி ஆழத்திற்கு தோண்டி கிரவல் என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாகவும், ரியல் எஸ்டேட் என்ற பெயரில், நாழிமலைக்கு அருகில் பொன்னங்குளத்திற்கு அருகில், அரளியூத்துக்கு அருகில், பூமியின் மேல்பரப்பு மண்ணை அரசிடம் அனுமதி பெறாமல் 10அடி ஆழத்திற்கு தோண்டி கனிம வளம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்ளை போவதாகவும்,100க்கு மேற்பட்ட இடங்களில் பாறைகளை உடைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு கனிமவளக்கொள்ளை நடந்துள்ளதாகவும், அந்த கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக, கனிம வளத்துறை, வருவாய்துறை அதிகாரிகளும் செயல்பட்டு வருவதாகவும், அதன் காரணமாக நில நடுக்கம், பூமி அதிர்வு, பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், கூறி, சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுத்து, பூமியையும், மக்களையும் காப்பாற்றிட வேண்டும் என வலியுறுத்தி, (6.2.2023) இன்று இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி, (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் சார்பில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கும் போராட்டம் என்ற வகையில்,
தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் (6.2.2023, கோரிக்கை மற்றும் புகார் மனு அளித்துள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தேனி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …