Breaking News

ஸ்ரீ ல ஸ்ரீ சொக்கையா மடம் மற்றும் திண்டுக்கல் கஸ்தூரிபாய் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம்!

வாடிப்பட்டி ஶ்ரீ ல ஶ்ரீ சொக்கையா சுவாமி மடத்தில் வெகு விமர்சையாக பௌர்ணமி பூஜையுடன் கஸ்தூரி பாய் மருத்துவ மனை இணைந்தது இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.
வாடிப்பட்டி அக்.29.
மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ லா ஸ்ரீ சொக்கையா மடம் . இந்த ஸ்ரீலஸ்ரீ சொக்கையா மடத்தின் தலைவராக மணிகண்டன் இருக்கிறார்.
இங்கு மாதம் மாதாம் பௌர்ணமி அன்று வெகு விமர்சையாக பூஜை நடக்கும் .
அத்துடன் அன்னதானம் வழங்கப்படும்.


அதேபோல் 28/10/2023 சனிக்கிழமை பௌர்ணமி நாளன்று அபிஷேக பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது .அத்துடன் ஸ்ரீ ல ஸ்ரீ சொக்கையா மடம் மற்றும் திண்டுக்கல் கஸ்தூரிபாய் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


இந்த இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் முதியவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் கஸ்தூரி பாய் மருத்துவமனை மருத்துவர் திவ்யா மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனை இலவச மருத்துவ முகாமின் பொறுப்பாளர் பிந்து அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக லதா மீனாட்சி சுந்தரம் மீனாட்சி மற்றும் யுவஶ்ரீ ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். சொக்கையா சுவாமி மடத்தில் நடந்த பூஜை மற்றும் அன்னதானம் மற்றும் இலவச மருத்துவ முகாம் மிக சிறப்பாகவும் அமைதியாகவும் நடந்தது.
இலவச மருத்துவ முகாமில் கஸ்தூரிபாய் மருத்துவமனையின் சார்பாக வந்திருந்த செவிலியர்கள் கிறிஸ்டி ,ரஜினி கலோலின் மற்றும்
லேப் டெக்னீசியன் ரேவதி தேவி, மார்க்ரேட்
கிறிஸ்டி
மற்றும் எழுத்து பதிவாளர் காளீஸ்வரி மற்றும்
உதவியாளர்கள் உதயகுமாரி
மருத்துவர் உதவியாளர் கார்த்திகா ஆகியோர் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ பரிசோதனை செய்தனர். மருத்துவர் திவ்யா அவர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நல்ல முறையில் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினர்.
அது மட்டும் இல்லாமல் சொக்கையா சுவாமி கோவிலின் நிரந்தர பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பௌர்ணமி பூஜை மற்றும் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர் .அதில் முக்கியமாக தீவிர பக்தர்கள் ஆகிய சண்முகம் ,கருப்பையா ,
நடராஜன், தனபால் கார்த்தி ,ஆகியோர் கலந்து கொண்டனர் .
பௌர்ணமி அன்று நடந்த சொக்கையா சுவாமி மடத்தில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட அனைவரும் இலவச மருத்துவ முகாமில் மருத்துவ சிகிச்சை சிறந்த முறையில் பார்க்கப்பட்டதாக கஸ்தூரிபாய் மருத்துவமனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மற்றும் சொக்கையா சுவாமி மடத்தின் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

ராமர் கோவில் கும்பாபிஷேகம்அத்வானி வரவில்லை… காரணம் என்ன

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அத்வானி வரவில்லை… காரணம் என்ன?உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்டது. பிரதமர் …