ஸ்தம்பித்து போன தாம்பரம் ரயில் நிலையம் !
கூட்டம் கூட்டமாக வடமாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களின் உடைமைகள் அடங்கிய மூட்டை முடிச்சுகளுடன் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள். இதனால் பல ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.குறிப்பாக சென்னை தாம்பரம் ரயில் நிலையங்களில் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் கூடினர். இதனால் அந்த ரயில் நிலையம் ஸ்தம்பித்து போனது. இதுபற்றி விசாரித்தபோது தான் முக்கிய தகவல் வெளியானது. அதாவது நாளை மறுநாள் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டை விட வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி என்பது மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் தான் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடும் நோக்கத்தில் அவர்கள் சென்னையில் இருந்து கூட்டம் கூட்டமாக ரயில்களில் சொந்த ஊருக்கு செல்வதும் தெரியவந்தது. மேலும் இன்று சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணிப்பதற்காக தான் ஒரே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதோடு தற்போது சென்னையில் இருந்து வெளியேறிய வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்க மாநிலம், பீகார் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் ஒரே நேரத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடியதால் அந்த இடம் ஸ்தம்பித்து போனது.அதிகமான வடமாநில தொழிலாளர்கள் தாம்பரத்தில் கூடிய நிலையில் சிறப்பு ரயிலுக்கு சென்றது தெரியவந்தது.