வேலூர் மாநகராட்சியின்
சுகாதார சீர்கேடுகள் !
வேலூர்
முள்ளி பாளையம், கோரிமேடு,
வார்டு 31 , இல் அமைந்துள்ள பொது கழிப்பிட பல மாதங்களாக மக்கள் பயன்பாடு இல்லாமல் சேதம் அடைந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் பேசுவதால் உடனே சுகாதாரம் மற்றும் கிடக்கும் கழிப்பிட கட்டிடத்தை இடித்து அகற்றி புது பொது கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டிற்கு கட்ட வேண்டும் என பலமுறை வேலூர் மாநகராட்சி மேயர் மற்றும் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை வேலூர் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் மாநகராட்சி இந்தக் கழிப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றாமல் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இப்படியே
நிலை தொடர்ந்தால் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாத பொதுக் கழிப்பிட கட்டிடத்தில் இருந்து டெங்கு போன்ற தொற்று பரவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது .ஆகவே
பொதுமக்களின் நலன் மீது அக்கறை இல்லாத மக்களின் நலனுக்கு வழிவகை செய்யாத மாநகராட்சி நிர்வாகமும், மாநகராட்சி மேயரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என
வேலூர் மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் முன்னா கோரிக்கை விடுத்துள்ளார்.