விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் தவணை தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு!
2023 – 2024ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டில் இருக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது என்னவென்றால் PM-KISAN திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தவணை நிதியை மத்திய அரசு அதிகரிக்கலாம் என்பது தான். விவசாயிகளுக்கான PM-KISAN திட்டத்தின் தவணை தொகையை பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி அறிவிப்பு வெளியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளாக 4 மாத இடைவெளியில் தலா ரூ.2000, அவர்களின் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிதி உதவி தொகையை ரூ.2000 அதிகரித்து ஆண்டுக்கு ரூ.8000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிட்டால் தற்போது 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 சம தவணைகளில் தலா ரூ.2,000 வழங்கப்படுவதற்கு பதிலாக, 3 மாதங்களுக்கு ஒருமுறை 4 தவணைகளில் ரூ.8,000 நிதி உதவி விவசாயிகளுக்கு வழங்கப்படலாம் என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் கிசான் என்பது இந்திய அரசின் முதன்மையான விவசாயிகள் நலத் திட்டமாகும்.
PM Kisan திட்டம் டிசம்பர் 2018 இல் தொடங்கப்பட்டது. PM Kisan என்பது குறைந்தபட்ச வருமான ஆதரவு திட்டமாகும். பிரதம மந்திரி கிசானின் கீழ், தகுதியுள்ள விவசாயி குடும்பங்களுக்கு ரூபாய் 6,000 பண உதவி வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.