Breaking News

விருதுநகர் மாவட்டம் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட
அமைச்சர்
ராமச்சந்திரன் .

விருதுநகர் மாவட்டம் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட
அமைச்சர்
ராமச்சந்திரன் .

விருதுநகர். டிச.26


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் பயிர்சேதம் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் முன்னிலையில், மழையால் சேதம் அடைந்த பயிர்களின் விவரம் குறித்து விவசாயிகளிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (25.12.2023) கேட்டறிந்து, பயிர் சேதம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி ஆகிய வட்டாரங்களில் நெற்பயிர்கள் 23,214 ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியங்கள் 53,621 ஹெக்டேர் பரப்பிலும், பயறு வகைகள் 5,637 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய் வித்துக்கள் 4,784 ஹெக்டேர் பரப்பிலும், பருத்தி 15,552 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 893 ஹெக்டேர் பரப்பிலும் ஆக மொத்தம் 1,03,701 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

அதன்படி, கனமழையின் காரணமாக, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் குறித்து, வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் உயர் அலுவலர்கள் தலைமையில் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று, அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து ஆய்வு செய்து, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்தார்.
அவர்கள் தெரிவித்ததாவது:-
கடந்த வாரம் பெய்த கன மழையால் விருதுநகர் மாவட்டத்திலும் நெல், உளுந்து, பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன. பயிர் சேதம் அடைந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியருடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் மட்டும் 15 ஆயிரம் எக்டேர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஅதில், 7 ஆயிரம் ஏக்கர் மழையால் சேதம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், கணக்கீட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், வேளாண்மைத்துறை அலுவலர்களும் மேற்கொண்டுள்ளனர். பயிர்சேதம் குறித்த விபரங்களை மாவட்ட ஆட்சியரிடம் பெற்று, தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு விருதுநகருக்கு வருகை தந்தபோது, விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த விவரங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பயிர் சேதம் குறித்து கணக்கிட்டு அறிக்கையை அனுப்புமாறு தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் இன்று பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.நிவாரணத் தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்தை;துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மேலும் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து விரைந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, கோட்டாட்சியர்கள் .வள்ளிக்கண்ணு( அருப்புக்கோட்டை) சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன்(சிவகாசி), ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் திருமதி சசிகலா(அருப்புக்கோட்டை), மல்லி கு.ஆறுமுகம்(திருவில்லிபுத்தூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) நாச்சியார் அம்மாள், உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!சேலம்: ஜன.22மாநாட்டுத் திடலில் உள்ள …