Breaking News

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்து வமனையில்திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா .சுப்பிரமணி!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் (21.1.23) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு பொது மருத்துவமனையை திடீர் ஆய்வு மேற்கொண்டார் .

அப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்தப் பெண் கண்ணீர் மல்க அமைச்சரிடம் பல நாட்களாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். உடனே அந்தப் பெண்மணி அழைத்து என்னுடன் வாருங்கள் நான் மருத்துவரிடம் உங்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க கூறுகிறேன் என்று ஆறுதல் கூறி அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமில்லாமல் மருந்து வழங்கும் இடம் மருத்துவர்கள் வருகை பதிவேடு மருத்துவமனையில் சிகிச்சை யில் இருக்கும் பெண்மணிகளிடம் நலம் விசாரித்தார்
மருத்துவமனை சுகாதாரமாக முறையில் இருக்கிறதா என்றும் மருத்துவமனையை சுற்றி பார்வையிட்டார். மருத்துவமனையில் ஒரு சில இடங்களில் சுத்தமில்லாமல் இருப்பதை பார்த்து அதை மருத்துவமனை ஊழியரிடம் இதுபோன்று இருக்கக் கூடாது என்று எச்சரித்தார். அமைச்சர் மா சுப்பிரமணி அவர்களுடன்
சட்டமன்ற உறுப்பினர்கள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ரகுராமன் ராஜா, பூமிநாதன் , ஆகியோர் உடன் இருந்தனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …