Breaking News

விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற் கொண்டதமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு!

விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் க.அன்பழகன் (கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்) தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவினர் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
—–

விருதுநகர் மாவட்டத்தில்,(31.10.2023)தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் க.அன்பழகன் (கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரவை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் ம.சிந்தனை செல்வன்(காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர்), .ச.சிவகுமார் (மயிலம் சட்டமன்ற உறுப்பினர்), கோ.தளபதி(மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்), வி.பி.நாகைமாலி (கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்), .மு.பூமிநாதன் (மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) மற்றும் .செல்லூர் கே.ராஜூ(மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம், தீக்காய சிகிச்சைப்பிரிவு, புறநோயாளி பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தற்போது வரை செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், அங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சையின் தரம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி பள்ளிக்குச் சென்று வகுப்பறைகள், மிதிவண்டி கூடம், கலையரங்கம், ஆய்வுக்கூடம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, விருதுநகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்குச் சென்று, பணியாளர்களின் விவரம், விடுதி அறைகள், அடிப்படை வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு தங்கி பயிலும் மாணவியர்களின் எண்ணிக்கை, வழங்கப்பட்டு வரும் உணவு முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர், கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பிரசவ அறை, பிரசவத்திற்குபின் கவனிப்பு அறை, சித்தமருத்துவ பிரிவு, மருந்துகளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருந்துகள் மற்றும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் அணையினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர்த்தேக்கத்தில் பழுதாகி உள்ள கதவணைகளை புதுப்பித்தல், நீர்த்தேக்கத்தின் பலவீனமான கரை பகுதியை பலப்படுத்துதல் உள்ளிட்ட புரணமைப்பு பணிகள் மேற்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும், விருதுநகர் சிட்கோ தொழில்பேட்டையில் மாவட்ட தொழில் மையத்தின் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தமிழக அரசின் மூலதன மானியம் பெற்று, ரப்பர் கை உறைகள் தயாரித்து வரும் நிறுவனத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள், உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், துணைச் செயலாளர் சு.பாலகிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சங்குமணி, மாவட்ட முதனமைக் கல்வி அலுவலர் .இராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜன், செயற்பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இராமசுப்பிரமணியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!

எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது! இளைஞரணி மாநாட்டில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் ஆவேசம்!சேலம்: ஜன.22மாநாட்டுத் திடலில் உள்ள …