Breaking News

விருதுநகர் பொதுக் கணக்குக் குழு ஆய்வுக்கூட்டம்

விருதுநகர் பொதுக் கணக்குக் குழு ஆய்வுக்கூட்டம்

19.01.2023
விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குக்குழு செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர்ஃஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வ பெருந்தகை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்களான பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் .பூண்டி கே.கலைவாணன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் ஆகியோர் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கையின் படி, மாவட்டத்தில் உள்ள 13 துறைகளில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பத்திகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, உள்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையில், தரவு சரிபார்ப்பு சுத்தப்படுத்தும் முறை, இலக்க மயமாக்கல், நெறிமுறைகளின்படி அமையாமை தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறையில், சவக்கிடங்கு வசதிகள், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை, இரத்த சேமிப்பு வசதிகள், மனித வளம், மற்ற மருத்துவமனைகளுக்கு திருப்பப்பட்ட சிறப்பு மருத்துவர்கள், நிறுவப்படாத பயனற்ற எக்ஸ் – ரே இயந்திரங்கள், முதியோரின் நல்வாழ்வுக்கான தேசிய திட்டத்தின் கீழ் மாவட்ட மூப்பியல் மருத்துவ அலகுகள் அமைக்காமை, மருந்து பரிசோதனை ஆய்வகத்தின் செயல்பாடு தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், ஆக்கிரமிப்புகளின் தன்மை மற்றும் அளவு, இலக்கிடப்பட்ட மக்களுக்கு ஓய்வூதியர்களின் எண்ணிக்கை தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில், ஒப்பந்தகாரருக்கு பணம் வழங்கல் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
நெடுஞ் சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில், வரவு செலவுத் திட்டத்தில் நிதி திருப்புகை தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையில், தடுப்புகளை நிறுவும்போது தொழில்நுட்ப பரிந்துரைகள் பின் பற்றப்படாமை, சூழலியல் ரீதியாக நிலையான முன்னேற்றம் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், தகவல் பகுப்பாய்வு பிரிவின் அறிக்கைகள் பயன் படுத்தப்படாமை, உள்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அமைப்பு முறை, வரி வீதத்தை கடைப் பிடித்தமை, உள் தணிக்கை, மேல்முறையீடுகளில் நிலுவையிலுள்ள இனங்களின் மீதான தொடர் நடவடிக்கை தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
உள் (போக்குவரத்து) துறையில், மேக்ஸி கேப் மற்றும் சரக்கு வாகனம் உரிமையாளர்களிடமிருந்து வரி வசூல், அனுமதி சீட்டு நிபந்தனைகள், கட்டுமான உபகரண வாகனங்களுக்கான வரி வசூல் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையில், மின்னணு சுரங்க இருப்பு பதிவேட்டு முறை, ஆளில்லா வான்வெளி வாகனத்தின் உதவியுடன் தணிக்கையின் சுரங்க ஆய்வு, கனிமத்தொகை தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில், விரிவாக்க பணிகள் குறித்தும், பள்ளிக் கல்வி உயர்கல்வித்துறையில் கணக்குகள் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்தும், ஒவ்வொரு துறை வாரியாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான த.கு.செல்வபெருந்தகை பேசியபோது
மத்திய மாநில நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, துறை வாரியாக ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் செலவினத்தொகை குறித்த ஆய்வில் கணக்காயர்கள் அளித்த அறிக்கையின்படி, அளிக்கப்பட்டுள்ள தணிக்கை பத்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களின் வரிப்பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து மத்திய, மாநில கணக்காயர்கள் தொடர்ந்து நூறு ஆண்டுகளாக வரவு செலவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் பொது தணிக்கை குழு ஆய்வு நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற பேரவைக்குழு பொதுக்கணக்குக்குழு ஆரம்பித்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதே இந்த குழுவின் நோக்கமாகும்; என தெரிவித்தார்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் அடுத்த தலைமுறையை சரியாக, வளமான ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இரும்பு பெண்மணி திட்டம், கண்மணி திட்டம், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பெற்று வீடு திரும்பும் தாய்மார்களுக்கு தாய் சேய் உடனான நினைவு புகைப்படம் வழங்குதல் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பாராட்டுக்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வபெருந்தகை அவர்கள் தெரிவித்துக்கொண்டார்.
முன்னதாக பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள், இலவச தையல் இயந்திரங்கள், இலவச தேய்ப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிகள், ஸ்மார்ட் கைப்பேசிகள், விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள், விவசாய உபகரணங்கள் என 24 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள்.,இ.கா.ப., துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.திலீப்குமார்.,இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிகுமார், பொதுக்கணக்குக் குழு இணைச்செயலாளர், துணைச்செயலாளர், கோட்டாட்சியர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About neWsoFtTAmilNADu

Check Also

நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …