கடந்த அதிமுக ஆட்சியில் சோழவந்தான் அதிமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த மாணிக்கம் (தற்போது பிஜேபி கட்சியில் ) ஒப்பந்தம் எடுத்த 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வாடிப்பட்டி குப்பை கிடங்கு பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.05/06/23 அன்று திறந்த முதல் நாளே மர்ம நபர்கள்
குப்பை கிடங்கில் தீ வைத்தால் பொதுமக்கள் அவதி!
டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படவதால் மலைபோல் சேர்ந்து உள்ளது.
இந்த தீ பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி பேருராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகளை திடக் கழிவு கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது.
டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படவதால் மலைபோல் சேர்ந்து உள்ளது. கோடை வெயில் அதிகரித்து காணப்படும் இந்த நிலையில் குப்பை கிடங்கிற்கு மர்ம நபர் தீ வைத்துள்ளனர்.
தீ எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் கண் எரிச்சல், மூச்சு தினறல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் சுமார் 2 கோடி மதிப்பிலான ,மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிவு மேலாண்மைக் கிடங்கை தீ வைத்து நாசமாக்கியதால் தற்போது வரை தீயணைப்புத் துறை அதிகாரிகள் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கழிவு மேலாண்மை செல்லும் வழி முழுவதும் குப்பை கொட்டப்பட்டுள்ளதால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாமல் விரைவில் தீயை அணைக்க முடியாமல் போராடி வந்துள்ளனர்.
மதுரை மாவட்ட நிர்வாகமே தீ வைத்த மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடு..
பட்டியலின மக்கள் வாழும் பகுதியான குலசேகரன்கோட்டை பகுதியில் இருக்கும் திடக் கழிவு கிடங்கில் நடந்த தீ விபத்து குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக பேரூராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வாடிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது அ.திமு.க. கவுன்சிலர்கள் சரமாரி குற்றசாட்டு பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில்18 வார்டுகள் உள்ளது. இதில் 9 தி.மு.க., 1 காங். கவுன்சிலர்களும்., ஒரு சுயோட்சை கவுன்சிலரும், 6 அ.தி.மு.க. கவுன்சிலரும், 1 த.மா.கா கவுன்சிலரும் உள்ளனர். நேற்று முன் தினம் காலை குலசேகரன் கோட்டை பகுதியில் உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ பிடித்தது. இதனால் அங்கு புகை மூட்டமாக காணப்பட்டது. இதுகுறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த 4வதுவார்டு கவுன்சிலர் இளங்கோவன் என்ற கிஷோர் வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த பின் இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலருக்கும், மண்டல உதவி இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க கோரி கவுன்சிலர் இளங்கோவன் செல்போனில் புகார் தெரிவித்தபோது .
உதவி இயக்குநர் எந்த பிரச்சனையானாலும் செயல் அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும் என பதில் கூறி போனை கட் செய்ததால் ஆத்திரமடைந்த அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் இளங்கோவன் அசோக்குமார். வெங்கடேசன் பிரியதர்ஷிணி. சூர்யா. தமாகா. கீதா சரவணன். உள்ளிட்ட 6. கவுன்சிலர்கள்
5/06/23 அன்று மாலை 5 மணியளவில் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தை நடத்தினர். உடனே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . உடன் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் அசம்பாவிதம் ஏதும் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டனர்.
அதன் பின்னர்.06/06/23 அன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் குற்றசாட்டு குறித்த பேச்சுவார்த்தையில்
வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன்,தாசில்தார் மூர்த்தி, சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம்,
வருவாய் ஆய்வாளர் அசோக் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டநிலையில் அ.தி.மு.க கவுன்சிலர் இளங்கோவன் ,வீடு பிளான் அனுமதிக்கான காசோலை கொடுத்து இரசீது கொடுக்காமல் இழத்தடிப்பு. வார்டுகளில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதில் மெத்தனம்போக்கு.மாதாந்திர கூட்டத்திற்கான முன் அறிவிப்பு கடிதம் கொடுக்காமலே எதிர் கட்சி கவுன்சிலர்களை புறக்கணித்து கூட்டம் நடத்துதல் கழிவுநீர்வாய்க்கால் போன்ற திட்டபணிகளுக்கு திட்டமிடல் இல்லாமல் பணி தாமதம்.குப்பை தரம்பிரிக்காமல் தீ வைப்பதால் சுற்று சூழல் மாசு
ஓப்பந்த தொழிலாளர் சம்பளத்தில் முறைகேடு.மூறையான ஆவண பராமரிப்பு இல்லை.உள்ளிட்ட அடுக்கடுக்கான
பல்வேறு குற்ற சாட்டுகளை மாவட்ட உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் ரிக்கார்டு கிளார்க் துப்புரவு ஆய்வாளர்..ஓஹெச்டி இயக்குனர்.இளநிலை உதவியாளர் ஆகியோர் மீது கூறினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்பு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து குற்றசாட்டுகளின் உண்மை தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் நேரில் ஆய்வு செய்ய வேண்டி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக தகவல் வந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால் தற்போது குலசேகரன் கோட்டை திடக் கழிவு மேலாண்மை கிடங்குக்கு செல்லும் வழி முழுவதும் கொட்டப்பட்டிருந்த கழிவு குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றி சாலை முழுவதும் சுத்தம் செய்துள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.
திடக் கழிவு மேலாண்மை கிடங்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ..
அரசு சாரா அமைப்புகளின் பங்கு
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள்.
வீட்டு உபயோகம் திடக்கழிவுகளை அக்கம்பக்கத்திலோ, தெருக்களிலோ, திறந்த வெளியிலோ, காலியாக இருக்கும் நிலங்களிலோ, கழிவு நீர் சாக்கடைகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ தூக்கி எறிதல் கூடாது.உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ள பொதுவான குப்பைத்தொட்டிகளில் உணவு கழிவு/மட்கும் கழிவுகளைப் போட வேண்டும்
கடைகள், அலுவலகங்கள் வணிக வளாகங்களில் அமைந்திருந்தால் நிறுவனங்கள், முதலியவை பேரூராட்சி நிர்வாகத்தில் வைக்கப்பட்டுள்ள பொது குப்பைத் தொட்டியில் கொட்டலாம்.