Breaking News

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் சாதனை விளக்கக் கூட்டம்!

150 நாட்களில் 3500 கிலோமீட்டர் நடந்து சாதனை படைத்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்!
கடந்த ஆகஸ்ட் மாதம் 2022 ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். கடந்த ஐந்து மாதங்களாக 3500 கிலோ மீட்டர் நடந்து
150 நாட்கள் முடிந்த நிலையில் ஜனவரி 30 ஆம் தேதி நிறைவு செய்தார்.
அதை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் சாதனை விளக்க கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

சோழவந்தான் காங்கிரஸ் கட்சி சார்பாக



சோழவந்தான் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் குறித்து சாதனை விளக்க கூட்டம் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிசந்திரன் தலைமையில் நடந்தது.இதில் மாநில பொது குழு உறுப்பினர் மூர்த்தி. சோழவந்தான் பேரூர் தலைவர் முத்துப் பாண்டி. சிறுபான்மை பிரிவு பாதுஷா. மாவட்ட நிர்வாகிகள் சங்கரபாண்டி இளவரசு.கனகராசு.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சோழவந்தான் பககுதிகளில் நான்கு இடங்களில் காங்கிரஸ் கட்சியின் கட்சி கொடியேற்றிவைத்து நலதிட்ட உதவிகள் வழங்கினர்.

About neWsoFtTAmilNADu