மோட்டார் வாகன சட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டு அளவுக்கு அதிகமாக கல் மண் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள்! நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மூணார் செல்லும் சாலையில் அமராவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவு 12 மணிக்கு அளவுக்கு கிராவல் மண் எடுத்துச் சென்ற டாரஸ் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அதே நெடுஞ்சாலை பணிக்கு மண் கொட்டி விட்டு எதிரே வந்த மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் அதி வேகமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டது .
இந்தப் பெரும் விபத்தில் கிராவல் மண் எடுத்து வந்த டாரஸ் டிப்பர் லாரியின் ஓட்டுனர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை வந்து சிக்கி இருந்த லாரி ஓட்டுனரை வெளியே எடுத்து உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்
அதன் பின்பு மேல் சிகிச்சைக்காக வாகன ஓட்டுனரை கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வாகன ஓட்டுநர் உயிரிழந்ததாக காவல்துறை (CR.no.20/23) வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக அமராவதி காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த விபத்து சம்பந்தமாக களத்தில் விசாரித்த போது கடந்த சில வருடங்களாக உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி மூணாறு செல்லும் நெடுஞ்சாலைகளில் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் நள்ளிரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் அச்சத்தில் இருந்து வந்ததாகவும் அளவுக்கு அதிகமாக லாரிகளில் மண் எடுத்துச் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல பேர் உயிரிழந்ததாகவும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருப்பூர் மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள் ஆனால் அது வேறு சடங்காக மட்டுமே இருப்பதாகவும் அதன் பின்பு காவல்துறையும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் எந்த வித வாகன சோதனை மேற்கொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏனென்றால் நெடுஞ்சாலைகளுக்கு பயன்படுத்தும் லாரிகள் அனைத்தும் அரசியல்வாதிகளின் வாகனங்களாக இருப்பதால் அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் சுணக்கம் காட்டுவதாக தான் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மற்றொன்று நெருஞ்சாலை பணி ஒப்பந்தம் எடுப்பவர்களும் முக்கிய அரசியல்வாதிகளின் நெருக்கமானவர்களாக தான் இருக்க முடியும் என்றும் அப்படி இருக்கும்போது நெடுஞ்சாலைக்கு பயன்படுத்தும் வாகனங்கள் சட்டவிரோதமாக விதிகள் மீறி செயல்படும்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி சட்டவிரோதமாக அதிக எடை கொண்டு செல்லும் லாரிகள் கட்டுப்பாடுகளை இழந்து மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாவதால் பல உயிர்கள் பலி ஆவது தான் உண்மையாக உள்ளது. இதில் முக்கியமாக லாரி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ இரவு நேரங்களில் பொதுத்துறை சம்பந்தமாக நடக்கும் நெடுஞ்சாலை மற்றும் அரசு கட்டிடப் பணிகளுக்கு மண்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிகள் இருக்கும் நிலையில் சட்டத்தை மீறி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் வாகன உரிமையாளர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டால் மட்டுமே இதுபோன்ற வாழ்த்துக்கள் நடக்காமலும் விபத்துகளில் இருந்து பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பது தான் நிதர்சனம். பொறுத்திருந்து பார்ப்போம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களின் நடவடிக்கையை.
அமராவதி PS Cr
எண்.20/23
D/o: .09.02.23 00.45 மணி
எஸ் ஓ சி: உடுமலைப்பேட்டை முதல் மூணார் சாலை, மானுபட்டி பிஏபி கானல் அருகில்,
இறந்த நபர்:
திலிப் என்ற ராம்கிஷோர் -29
S/o ராஜ்பகதூர்
நாக்லா கிரி
உத்திரப்பிரதேசம்
இப்போது மணிக்கு
டிபிஜே நிறுவனம்
அந்தியூர்
உடுமலைப்பேட்டை
MH 40 AK 6561 TATA
எதிரே வந்த மற்றொறு லாரியின் பதிவு எண்.
TN 78 AY 0876 TATA
Amarāvati PS Cr