Breaking News

முரசொலி முகநூல் பக்கத்தை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

முரசொலி முகநூல் பக்கத்தை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரபலங்களின் முகநூல் பக்கங்களை மர்மநபர்கள் அவ்வப்போது ஹேக் செய்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

பின்னர் ஹேக் செய்யப்பட்ட பக்கங்களை சம்மந்தபட்டவர்கள் வல்லுநர்களின் உதவியுடன் மீட்பர்.

இந்த நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி முகநூல் பக்கம் மர்ம நபர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நாளிதழ் மேலாளர் சார்பில் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முரசொலியின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்துள்ள மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே ஹேக் செய்யப்பட்ட முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை மர்மநபர்கள் பதிவேற்றம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

About neWsoFtTAmilNADu

Check Also

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் …