Breaking News

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் இடங்களை திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர்!

வேலூர் சத்துவாச்சாரியில் முதல்வர் ஆய்வு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகள், மலை கிராம பகுதிகளில் உள்ள 1545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 1,14,095 குழந்தைகள் பயனடைய உள்ளனர். மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகிய குறிக்கோளுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.உணவு தாயரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தை உறுதி படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள, வேலூர் மாநகராட்சி, மண்டலம்-2, சி.எம்.சி.காலனி, சத்துவாச்சாரியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் இடங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது.

About neWsoFtTAmilNADu

Check Also

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …