அதிமுக பொதுக்குழு கூட்டம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
அதிமுக பொதுக்குழு செல்லுமா? செல்லாதா?
திக் திக்
எடப்பாடி& ஓபிஎஸ்
2022ல் ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் சுப்ரீம் கோர்டில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்துவரும் நிலையில், இன்று இபிஎஸ் தரப்பு வாதத்துடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைகிறது.
தீர்ப்பும் இன்றே வரும் என்று தெரிகிறது.
அதிமுகவின் விதிகள் மீறி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.