காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
காஞ்சிபுரம் நவம்பர் 09
அரசாணை எண்.77, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, நாள். 13.09.2017 –ன்படி மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 2023-24 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம். விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில்
உள்ள காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ
18.11.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார். மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
உதவி இயக்குநர் அலுவலகம்,
எண்.2/601A, கிழக்கு கடற்கரை சாலை,
சின்ன நீலாங்கரை,
(நேர் ஐஸ் பேக்டரி பஸ் நிறுத்தம்,
சென்னை – 600 115. அலுவலக தொலைபேசி எண்: 9384824247 . 9843305513 என தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
Check Also
வேலைவாப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான
விண்ணப்பங்கள்
வேலைவாப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது – மாவட்ட …