Breaking News

மீனவர் கூட்டுறவு நகைக் கடன் வழங்கும் வங்கியை திறந்து வைத்த கனிமொழி எம்பி

தூத்துக்குடி: மீனவர் கூட்டுறவு நகைக் கடன் வழங்கும் வங்கியை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி. நவம்பர் 9

தூத்துக்குடியில்  மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கியினை  பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி  திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கியினை  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்,  மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலையில் ..திறந்து வைத்தார். 

பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்த அத்தனை அறிவிப்புகளையும் எவ்வாறு நிறைவேற்றி வருகின்றார்களோ அதேபோல் அவர்களின் உத்தரவின்படி  மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தொழில், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். 

இந்த வங்கியை பயன்படுத்தி உங்கள் தொழிலை, வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும். மீனவர்களின் கோரிக்கைகளை மீனவர்கள் மாநாட்டிலேயே நிறைவேற்றிய முதலமைச்சர்   தமிழ்நாடு முதலமைச்சர் தான்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில்  அமைச்சர் பி.கீதாஜீவன்  தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதைப்போல மீனவர்களுக்கு கடன்கள் வழங்குவதற்காக இன்று மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. வங்கி அமைத்து தர வேண்டும் என்ற மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில்; உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பயனடைய முடியும்.  தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீண்ட நாட்களாக பட்டா வழங்கப்படாமல் இருந்த சிங்காரவேலர் குடியிருப்பு மற்றும் சுனாமி குடியிருப்பில் உள்ள மீனவர்களுக்கு பட்டா வழங்கியுள்ளார்கள். இவ்வாறு  தமிழ்நாடு முதலமைச்சர்  மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தபடி இன்று மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மூலம் குறைந்த வட்டியில் மீனவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கப்படும். மீனவர்களுக்கு இந்த வங்கி மூலம் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அந்த உதவிகள் எல்லாம் செய்யப்படும்.  தமிழ்நாடு முதலமைச்சர்  விவசாயிகளுக்கு அரசு என்னென்ன நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்களோ அதேபோன்று மீனவர்களுக்கும் திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். இந்த வங்கியில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் பயன்பெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

மீனவர்களுக்குகென்று தனி மாநாட்டை �

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல் (வடக்கு), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜயராகவன், முக்கிய பிரமுகர்கள் ராமஜெயம், உமரிசங்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.”
 

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …