மாவட்ட செய்திகள் 28/01/23 neWsoFtTAmilNADu January 27, 2023 தமிழ்நாட்டுச் செய்தி 116 Views ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வி. குமாரபுரத்தில் ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டு சங்கம் கட்டமைப்புகளை மேற்கொள்ள ஒரு லட்ச ரூபாய் மானியம் அனுமதிக்கப்பட்ட பதிவு சங்க ஆணைக்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கியபோது . தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாரி ஸ்ரீ உடன் இருந்தார். : 27.01.2023விருதுநகர் மாவட்டம்சிவகாசி வட்டம், செவலூர் கிராமத்தில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மூலம்78 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் நூற்பாலையினை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வரத்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்த போது.தமிழ்நாடு அரசு தொழில் துறையின் அங்கமான வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒற்றைச் சாளர வசதிகள் வழங்கிடும் முகமையாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டிற்கு முதலீட்டு வாய்ப்புகளை ஈர;த்து வருவதில் பெரும் பங்கு வகித்து வருகிறது.தொழில் துறையின் கீழ் இயங்கும் வழிகாட்டி நிறுவனத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் தொழில் முதலீடுகளை ஈரத்திடவும் சேவைகளை வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மூலம் 2021ம் ஆண்டு ஜீலை மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, சிவகாசி வட்டம், செவலூர் கிராமத்தில் 78 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சாவலோகா நூற்பாலை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய நூற்பாலையின் மூலம் இந்த பகுதிகளை சேர்ந்த 400 நபர்கள் நேரடியாகவும், 500 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறுவார்கள்.மேலும், மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிகுமார்,சிவகாசி கோட்டாட்சியார்,விஸ்வநாதன், ஸ்ரீ சர்வலோகா நூற்பாலை நிறுவன உரிமையாளா ராம் முருகேசன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மண்டல மேலாளார் சுரேஷ், உள்ளாட்சி பிரதிநிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆலை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து மகளிர்களுக்கான இலவச பேருந்தை புதிய வழித்தட சேவையை (சடையம்பட்டி) அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்த போது.உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் பொன்னமராவதி ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலமணி இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் குணசேகரன் உடனே இருந்தனர். திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை பனியன் நிறுவனத்தில் பணி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபரை வெளிமாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உருட்டு கட்டையால் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.சிகரெட் புகைக்கும் பொழுது தொழிலாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வட மாநில தொழிலாளர்களால் தமிழர் ஒருவர் தாக்க பட்ட சம்பவம் குறித்து வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சமூக வலைதளங்களில் தவறாக திருப்பூரில் வடமாநிலத்தினர் தமிழர்களை அடித்து விரட்டுவதாக வீடியோ சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருவது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் விளக்கம் கோவை வடவள்ளியைச் சார்ந்த 27வயது வித்யா என்பவர் 7மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்.10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகனுக்கும் தாயான இவரது தாய்ப்பால் கோவை அரசு மருத்துவமனைக் குழந்தைகளுக்கு தரப்படுகிறது.இந்தப் பெண்ணுக்கு சமூக அருவாளர்களின் பாராட்டு குவிந்து வருகிறது சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தக் கூடிய வகையில் கோவை மாநகர முழுவதும் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து இரண்டுசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டி மற்றும் கார் ஓட்டி வருபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து வர வேண்டும் சாலை விதி முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி சாலை போக்குவரத்து விழிப்புணர்வு முகாமில் 400 காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டர்கள் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி தலைக்கவசம் கட்டாயம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த உள்ளோம் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V பாலகிருஷ்ணன் அவர்கள் சாலை பாதுகாப்பு வாரம்-2023 முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுடன் லட்சுமி மில் சந்திப்பில் முறையாக சாலை விதிகளை கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும்,துண்டு பிரசுரம் வழங்கியும் தலைகவசம் அணியாதவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் Share Facebook Twitter Stumbleupon LinkedIn Pinterest