Breaking News

மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்: இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை. நவ.29
மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகக் கூறி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும் அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டப்பட்டது.
அதேசமயம் சம்மன் அனுப்பாமல் மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்துவதற்காகவும், ஆவணங்களை கேட்டுப் பெறுவதற்கும் தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கேட்டது. தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்ற நீதிபதிகள் மூன்று வார காலம் அவகாசம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியதுது. மீண்டும் வழக்கு விசாரணையை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் இறுதி விசாரணை எப்போது நடைபெறும் என்று தெரியவரும்.

About neWsoFtTAmilNADu

Check Also

கட்டிடங்களுக்கு அபராதம் செலுத்தினாலும் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது’. ஹைகோர்ட் உத்தரவு

கட்டிடங்களுக்கு அபராதம் செலுத்தினாலும் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது’. ஹைகோர்ட் உத்தரவு!மதுரை: சட்டவிரோதமாகவும், கட்டிட வரைபட அனுமதி இல்லாமலும் …