கடந்த ஆண்டு 05/07/22 அன்று திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் உடுமலைப்பேட்டை நீதிமன்ற வளாகம் அருகே ஆவின் பாலகம் வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளருக்கு 07/07/22 அன்று மாற்றுத்திறனாளி கோரிக்கை மீது ஆவின் பாலகம் வைக்க நடவடிக்கை எடுத்து அந்த விவரத்தை மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.
அதன் பின்பு வங்கி மேலாளருக்கு மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்குமாறு திருப்பூர் மாவட்டம் கனரா வங்கி பெதப்பம்பட்டி கிளை மேலாளருக்கு மாற்றுத்திறனாளி நல அலுவலர் 14/07/2022 அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு வருடம் ஆன நிலையில் இதுவரை ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எந்த வித பதிலும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திற்கு அனுப்பாமல் கிணற்றில் போட்ட கல் போன்று செயலிழந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இயங்கும் ஆவின் பொது மேலாளர்கள் மாற்றுத்திறனாளிகளை மட்டும் குறி வைத்து மனுவைக் கிடப்பில் போட்டு வஞ்சித்து வருவதாகவும் அவர்களது சலுகை சரியாக சென்றடையவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ள திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு வருடமாக மனு கொடுத்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிக்கு ஆவின் பாலகம் வைக்க திருப்பூர் மாவட்ட ஆவின் பொது பரிந்துரை செய்து உதவிட வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.