மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கோவை மாநகர காவல் துணை ஆணையர்!
கோவை. நவ.09
கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில்
மொட்டையடித்து நிர்வாண படுத்தி ராக்கிங் செய்த 7
மாணவர்களை பீளமேடு போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
7 மாணவர்கள் கைது
விசாரணையில் அந்த இரண்டாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து தாக்கி மிரட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் தரணிதரன், வெங்கடேஷ் ஆகியோரையும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாதவன், மணி ஆகியோரையும், 4-ம் ஆண்டு படிக்கும் ஐயப்பன், சந்தோஷ், யாலிஷ் ஆகியோர் என 7 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
அந்த 7 பேர் மீதும் ராகிங் சட்ட பிரிவுகள் உட்பட, சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட இருக்கின்றனர் என்று காவல்துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் இருக்கிறது. இங்கு ராகிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவங்களால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை மற்றும் அறிவுரை வழங்குகிறோம். வழக்கு பதிவு செய்வதன் மூலம் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அதேபோல ஒருவர் மீது வழக்கு ஆகிவிட்டால் அவர்களுக்கு அரசு வேலை மற்றும் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்புகள் அவர்கள் பெற முடியாது.
இதனால் கல்லூரி மாணவர்கள் ராகிங் போன்ற சம்பவத்தில் ஈடுபட வேண்டாம். தமிழகத்தில் ராகிங்க்கு எதிரான சட்டம் கடுமையாக இருக்கிறது. அதனால் இதில் யாரும் ஈடுபட வேண்டாம். மேலும் மாணவர்கள் கைது குறித்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Check Also
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆகும் டாக்டர் பிரசாந்த் பாராட்டி விருது வழங்கிய கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன்
சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு வெற்றி ஐபிஎஸ் ஆகும் டாக்டர் பிரசாந்த்க்கு கோவைகொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி விருது …