தென்காசி, விருதுநகர் மாவட்ட நிலவரம் குறித்து நேரடி மேற்கொண்ட கவர்னர் !
தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கடந்த, 2௮, 29ம் தேதிகளில் கவர்னர் ரவி சுற்றுப்பயணம் செய்தார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதாவும்
தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், அழகான மற்றும் மறக்க முடியாத இரண்டு நாட்களை இருந்தது என்றும்
விவசாயிகள், விவசாய சங்கங்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், மரம், பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள், மண்பாண்ட கலைஞர்கள், கைவினை கலைஞர்கள், சிறு, குறு நடுத்தர நிறுவன சங்கங்கள், சூரியசக்தி துறை நிறுவன பிரதிநிதிகள், சமூக தலைவர்களை சந்தித்ததாகவும்
சிவசைலம் கோவிலில் மக்கள் நலனுக்காக வேண்டிக் கொண்டேன். நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த பூலித்தேவன், ஒண்டி வீரன், வெண்ணிக்காலாடி ஆகியோருக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினேன்.
மக்களுக்கு இருக்கும் விருப்பங்கள் மற்றும் கவலைகள் பற்றிய நேரடியான அனுபவத்தை இந்த பயணம் எனக்கு வழங்கியது.
விவசாயிகள் அழுத்தத்தில் உள்ள போதும், ஆர்வமுள்ளவர்களாகவும், கைவினைக் கலைஞர்கள் கடுமையான தடைகளை எதிர்கொண்ட போதும், லட்சியம் மிக்கவர்களாகவும் உள்ளனர்.
சிறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்தை விரும்பினாலும், தடைகளால் அவை தேங்கியுள்ளன. முக்கிய தொழில்கள், தொழில்நுட்ப சவால்களை சந்தித்து வருகின்றன.
கிராமத்து இளைஞர்கள் இயல்பாகவே அறிவு ஜீவிகளாக உள்ளனர். முறையான தகுதிகள் இல்லாவிட்டாலும், அவர்களிடம் சரியான உந்துதலை ஏற்படுத்தினால், ஆக்கப்பூர்வம் மிகுந்தவர்களாக அவர்களால் திகழ முடியும்.
ஜாதிய பதற்றங்கள் மற்றும் சமூக பண்பாடுகளில், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலை அளிக்கின்றன. சமூக நீதி பற்றிய அதிகாரப்பூர்வ பிரமாண்ட விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக அவை உள்ளன.
அதில்
தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை மிகவும் கவலை அளிக்கின்றன.
மற்றும் சமூக பண்பாடுகளில், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலை அளிக்கின்றன.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்
கவர்னர் ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
Check Also
தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைத்து விடுவீர்களா!? ஸ்டாலின் ஆவேசம்!
https://publuu.com/flip-book/230051/547431/page/4