தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்புக்
குழுத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தலைமையில்,
மாவட்ட ஆட்சியர் ,
முன்னிலையில், நடைபெற்றது :
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தொழிற்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவினங்கள், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், கண்காணிப்புக்குழுத் தலைவரும்,தேனி பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில், துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
மத்திய-மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகளை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது மற்றும் அதனை கண்காணிப்பதற்காகவும், இந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, கண்காணிப்பு குழுக்கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டங்களின் வாயிலாக, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன்பயன்கள், எவ்வாறு மக்களை சென்றடைகிறது, அதனால் அப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களால் எடுத்துரைத்துக்கப்பட்டது. இருப்பினும் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வழங்கப்படும் கோரிக்கை மனுக்களை கனிவுடன் பரிசீலித்து, அதற்கு தீர்வு காணும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தங்களது பகுதிகளில் ஏதேனும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கோரிக்கைள் இருந்தால் அதனை துறை சார்ந்த அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, ,உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கண்காணிப்பு குழுத்தலைவரான தேனி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட ஊராட்சித்தலைவர் க.பிரிதா, துணைத்துலைவர் ராஜபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.