Breaking News

மதுரை to தேனி திண்டுக்கல் to குமிழி வரையிலான நான்கு வழி ஆறு வழி பசுமை வழி சாலை விரைவில்!

மதுரை தேனி வரையிலான பசுமை வழி சாலை விரைவில் தொடக்கம்!
NHAI ஆனது 700 கோடி செலவில் போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான 64 கிமீ பசுமை வழி நெடுஞ்சாலையை மேம்படுத்த உள்ளது. இங்கு விரிவுபடுத்தும் பணிகளை செய்து, புதிய நான்கு வழிச்சாலை அமைக்க உள்ளது இதற்கான.விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதோடு திண்டுக்கல்-தேனி-குமிளி நெடுஞ்சாலை NH-183ல் 138 கிமீ நீளமுள்ள நான்கு/ஆறு வழிப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்காக NHAI டெண்டர் விடுத்துள்ளது.


தமிழ்நாட்டில் மத்திய அரசாலும், மாநில அரசாலும் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் மாநில அரசு சார்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இப்போது இதற்கான டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.


சமீபத்தில்தான் மதுரை – போடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் தற்போது அங்கே ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான பசுமை வழி சாலை விரைவில் நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
இதனால் இந்த பாதையில் பயணம் இன்னும் எளிதாகும். அதோடு மிக வேகமாக மதுரையில் இருந்து போடிக்கு சென்று சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About neWsoFtTAmilNADu

Check Also

தமிழக மக்களுக்கு நாமம் போட்ட மத்திய பட்ஜெட்டை கண்டித்து காதில் பூக்களை சுற்றி கோவிந்தா கோவிந்தா என திராவிட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் !

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப் பட்டுப் போவீர்கள்  – பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் …