Breaking News

மதுரை வாடிப்பட்டியில்
ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார்
128 வது பிறந்தநாள்
இலவச மருத்துவ முகாம்.

வாடிப்பட்டியில்
ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார்
128 வது பிறந்தநாள்
இலவச மருத்துவ முகாம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரெட்டிநலசங்கம் மற்றும் ரெட்டி இளைஞரணி சார்பாக முன்னாள் தமிழகமுதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 128வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு சங்க செயலாளர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். தமிழன் குழுமம் தனபாலன், ஒன்றியசெயலாளர் பாலராஜேந் திரன், பா.ஜ.க.,ஒ.பி.சி.அணி முன்னாள் மாநிலதுணைத் தலைவர் கே.ஆர்.முரளிராமசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக், அ.தி.மு.க.பேரூர் செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கதலைவர் ஆர்.வி.செந்தில் குமார் வரவேற்றார். ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் அவர்களின் உருவப் படத்திற்கு இளைஞரணி தலைவர் முத்துகார்த்திகேயன் மாலை அணிவித்தார். யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா பொதுமக்களுக்கு வேட்டி,சேலை வழங்கினார். பொருளாளர் திலகர் இனிப்பு வழங்கினார். லயன்ஸ்மாவட்ட தலைவர் பாலாஜி அன்னதானத் தை தொடக்கி வைத்தார். இதில் இ.காங்கிரஸ் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வக்குமார், தி.மு.க.முன்னாள் பேரூர்செயலாளர் பிரகாஷ், மறத்தமிழர்சேனை முத்துக்குமார், கம்யூனிஸ்ட் செல்வராஜ், ஆட்டோ சங்கதலைவர் கௌரி நாதன், கவுன்சிலர் இளங்கோவன், கார்த்திக்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் ல்யன்ஸ்சங்கதலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.

பாலாஜி ஹோமியோபதி வர்மா கிளினிக் சார்பாக நடந்த இலவச மருத்துவமுகாமில் டாக்டர் பொன் யாழினி பாலாஜி, வர்ம சிகிச்சை மருத்துவர் ராஜ்முகம்மது மற்றும் மருத்துவகுழுவினர் ஹோமியோ, வர்ம சிசிச்சையளித்து கலிக்கம் ஆண்கள் பெண்கள் உட்பட 200 பேருக்கு இலவசமாக கண்களில் சொட்டு மருந்து ஊற்றப்பட்டது.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …