Breaking News

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 பேர் நியமனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்களாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உள்பட 5 பேர் நியமனம்
மதுரை. நவ.09
மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்களாக மதுரை அண்ணா நகரை சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனி வேல்ராஜன், கே.கே.நகர் சீனிவாசன், அரசரடி மீனா ஆகிய 5 பேரை நியமித்து இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மே 23-ந்தேதி மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள். அறங்காவலர்கள் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

About neWsoFtTAmilNADu

Check Also

ராமர் கோவில் கும்பாபிஷேகம்அத்வானி வரவில்லை… காரணம் என்ன

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அத்வானி வரவில்லை… காரணம் என்ன?உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்டது. பிரதமர் …