Breaking News

மதுரை மாவட்ட கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டாயமாக கண்காணிப்பு கேமராபொருத்த வேண்டும் . காவல் நிலையங்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!

கடந்த சில மாதங்களாக மதுரை புறநகர் பகுதிகளில் நடந்த கொலை ,கொள்ளை திருட்டு வழிப்பறி, கற்பழிப்பு போன்ற பல்வேறு தொடர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 45க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மதுரை மாவட்ட எல்லையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகள், சாலை சந்திப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு

அவர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் நகை செல்போன் அனைத்தையும் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எந்தெந்த கண்காணிப்பு கேமராக்களில் குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டது அந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருந்த உரிமையாளர்களை அனைவரையும் நேரில் அழைத்து அவர்களுக்கு நன்றியையும் பாராட்டு வந்தவர்களையும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்


பல்வேறு வாகன விபத்து வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறியவும், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய வாகனங்களை கண்டறியவும், பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடையவும் என பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தவர்களின் சமூக பொறுப்பையும், அக்கறையையும் கொண்ட பெண்கள் ஆண்கள் அனைவரையும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் வரவழைத்து அவர்களை காவல் கண்காணிப்பாளர் கௌரவம் படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அது மட்டும் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்ய உதவிகரமாக இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த அந்த  அவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் முக்கியமான ஒன்றாக இருப்பதால் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சுலபமாக விரைவில் பிடிக்க மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகர இணைப்புச் சாலைகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் . அப்படி மதுரை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் நேரடியாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்குமாறு செயல்படுத்த உள்ளதாகவும் இதற்கு மதுரை மாவட்டத்தில் உள்ள 45க்கும் மேற்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அவர்களின் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள கடை மற்றும் வீடுகளில் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்போடு கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About neWsoFtTAmilNADu

Check Also

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆகும்  டாக்டர் பிரசாந்த்  பாராட்டி விருது வழங்கிய கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன்

சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொண்டு வெற்றி ஐபிஎஸ் ஆகும் டாக்டர் பிரசாந்த்க்கு கோவைகொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி விருது …