Breaking News

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டப்பணிகளை ஆய்வு செய்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!

விருதுநகர் மாவட்டம்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்
நேரில் ஆய்வு.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம்  ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து

விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் (02.03.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டப் பணிகளை ஆய்வு செய்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!


விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II ன் கீழ் ரூ.3.17 இலட்சம் மதிப்பில், ஒருங்கிணைந்த நாற்றாங்கால் தோட்டம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் திட்டத்தின் கீழ், ரூ.309.10 இலட்சம் மதிப்பில், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும்,
சிவஞானபுரம் ஊராட்சி, சின்னமூப்பன்பட்டி கிராமத்தில், பாராளுமன்ற உள்;ர் பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.7 இலட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினையும்,
இனாம்ரெட்டியாபட்டி ஊராட்சி வீரக்குடும்பன்பட்டியில் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ், ரூ.11.56 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தினையும்,
ஒண்டிப்புலிநாயக்கனூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.30 இலட்சம் மதிப்பில் பெருமளவில் மரம் நடப்பட்ட பணியினையும் மாவட்ட ஆட்சியார் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். விருதுநகர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டம் பணி நடைபெற்று வருகிறது அதில் பல பணிகளில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் களப்பணியில் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை முத்து கவனிக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.

.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளாச்;சி முகமை) தண்டபாணி, செயற்பொறியாளர் .சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செண்பகவள்ளி, .சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
.

About neWsoFtTAmilNADu

Check Also

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

*மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு …