Breaking News

மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதால் தமிழக கிராமப்பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது முதல்வர் பெருமிதம்!

மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதால் தமிழக கிராமப்பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது: மு.க.ஸ்டாலின்


இந்தியா கிராமங்களில் வாழ்கிறது” என்ற தேசத் தந்தை காந்தியாரின் பிறந்தநாளில், ஜனநாயகத்தின் அடித்தளமான கிராம சபைக் கூட்டங்களில் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
வலிமையான – உண்மையான மக்களாட்சி நாட்டிலும் தொடர, மாற்றங்கள் கிராமங்களில் இருந்து தொடங்கட்டும்! எல்லார்க்கும்_எல்லாம் எனும் நாளைய இந்தியா நமதே” என முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம்.
ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது.
சென்னை:

கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு கிராம சபையில் பங்கெடுத்த நீங்கள், பங்கேற்காத உங்கள் ஊர் மக்களிடம் போய் சொல்லுங்கள், கிராம சபையை ஒரு ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றக் களமாக கருதி கலந்து கொள்ள வேண்டும் என்று.
கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மகளிர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் கலந்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கிராமசபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படுகிற பணிகள் பொதுவானதாகவும் எல்லோரும் பயன் பெறும் வகையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து, எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.
நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், சுகாதாரம் பேணுதல், முறையான திட, திரவக்கழிவு மேலாண்மை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை நிலைநிறுத்துகிற வகையில், எல்லா ஊராட்சி மன்ற தலைவர்களும் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்குகிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலமாக பயனடைந்து கொண்டு வருகிறார்கள்.
விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கிற வாய்ப்பை அரசு வழங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் கிராமப்புறப் பெண்கள்தான் அதிகமாக பயனடைகிறார்கள். 1000 ரூபாய் என்பது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கிறது. இன்னும் சொன்னால், ஊரகப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இந்தத் திட்டம் வழிவகை செய்திருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் என்கிற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.
அனைத்துத் துறையும் வளர வேண்டும் அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும்.
ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டு வருகிறேன்.
அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாக வேண்டும். இதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.
இன்று (திங்கட்கிழமை) காந்தியடிகளின் பிறந்தநாள். “இந்தியா-கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, ‘கிராம சுயராஜ்ஜியம்’ எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார்.
தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும், உழைக்கும், உழைக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

About neWsoFtTAmilNADu

Check Also

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …