திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 120 ஆண்டுகளான ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது
தமிழ்நாடு அரசு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள்
பள்ளிவாசலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமைச்சரை ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
உடுமலை நகர மன்ற உறுப்பினருமான திமுக நகர செயலாளர் வேலுச்சாமி நகர மன்ற தலைவர்மத்தீன் உடுமலை நகர மன்ற உறுப்பினர்கள் ஜாமியா மஸ்ஜித்
பள்ளிவாசல்
நிர்வாகிகள்
இஸ்லாமிய பெருமக்கள் அனைத்து மதம் சார்ந்த பெருமக்கள் அனைவரும் பெரும் திரளாக
120 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை புதுப்பிக்கும் நிறைவு விழா திறப்பு விழாவில் கலந்து கொண்டு 3000 நபர்களுக்கு மதியம் விருந்து
வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காவல்துறையினர் மிகச் சிறப்பாக கடந்த இரு தினங்களாக நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துகொண்டு தங்களுடைய காவல்துறையின் உடைய பணியை மிகச் சிறப்பான முறையில் செய்து வந்தார்கள்
அவர்களுக்கும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கும் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் நன்றியை தெரிவித்தார்கள்.