Breaking News

புதுக்கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது -மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கடந்த மாதம் ஐந்து மாணவ மாணவிகளை யாருக்கும் தெரியாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து சென்ற சம்பவம் தற்போது விசாரணையை தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவிகளை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்ற உதவி தலைமை ஆசிரியர்



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றும் ரமேஷ் என்ற வேதியல் ஆசிரியர்.

இவர் கடந்த மாதம் ஏழாம் தேதி அதே பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேரை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு தனது காரில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கு இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்து அதில் ஒரு அறையில் ஆசிரியரும் மற்றொரு அறையில் மாணவ மாணவிகளையும் அவர் தங்க வைத்துள்ளார்.பின்னர் அங்கு ஒரு மாணவியரிடம் ஆசிரியர் ரமேஷ் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் பின்னர் தனது காரில் சுற்றுலா அழைத்துச் சென்ற மாணவ மாணவிகளை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்த ஆசிரியர் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும் கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்களை அழித்து விட வேண்டும் என்றும் மாணவ மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.மேலும் சுற்றுலா சென்ற விவரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தால் செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக மாணவ மாணவிகளை ஆசிரியர் ரமேஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னரும் சம்பந்தப்பட்ட ஒரு மாணவியிடம் மட்டும் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வேதியியல் ஆய்வக அறையில் தனிமையில் இருந்ததாகவும் அதனை சில மாணவர்கள் பார்த்துள்ளதாகவும் இதன் பின்னர் இந்த பிரச்சனை பெற்றோருக்கு தெரிய வந்ததன் அடிப்படையில் பள்ளி நிர்வாக மூலம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுல பிரியாமற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டதில் இந்த குற்ற சம்பவங்கள் தெரிய வந்ததையடுத்து இது குறித்து அவர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ உள்ளிட்ட ஆறு பிரிவுகள் என் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவ மாணவியருக்கு பாதுகாக்க பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமும் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் ஐந்து மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று அதன் பின்பு அது குறித்து வெளியே சொல்ல கூடாது என மிரட்டிய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் உதவி ஆசிரியர் ரமேஷ்க்கு நேற்று இரவு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
13.2.2023 புதுக்கோட்டை நிருபர் பழனியப்பன்

About neWsoFtTAmilNADu

Check Also

நீலகிரி யானை வழித் தடங்களில் கட்டப்பட்டுள்ள 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற உரிமையாளர்களுக்கு அதிரடியாக நோட்டீஸ் …