Breaking News

பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:அண்ணாமலை

பாஜக ஆட்சிக்கு  வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:
இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காது
அண்ணாமலை!

ஶ்ரீரங்கம். நவ.09
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
100-வது தொகுதியாக
அரங்கநாத பெருமாள் இருக்கிற ஶ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறுகிறது. அரங்க பெருமாளின் உத்தரவு 100-வது தொகுதியாக இங்கே வரவேண்டும் .என்பதாக இருக்கிறது. இயற்கையாகவே 5 தொகுதிகளை ஒத்திவைத்து 100-வது தொகுதியாக அரங்க பெருமானின் மண்ணுக்கு வர வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி வரும்பொழுது, முதல் வேலை அந்த பெரியார்
சிலையை அப்புறப்படுத்தி நம்முடைய ஆழ்வார்களிலிருந்து, நாயன்மார்களிலிருந்து அவர்களுடைய சிலைகள் அங்கு வைக்கப்படும்.
தமிழ் புலவர்கள் சிலைகள் வைக்கப்படும். தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை வைக்கப்படும். நம்முடைய சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடுவோம் தவிர,
கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்று சொல்லக்கூடிய சிலையை, பா.ஜனதா ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே, தமிழகத்தில் உள்ள கோவில்கள் அருகில் வைத்துள்ள எல்லா சிலைகளையும் அகற்றி காட்டுவோம். அதுபோல் இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காது. இந்து அறநிலைத்துறை என்ற அமைச்சகத்தின் கடைசி நாள், பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முதல் நாளாக இருக்கும்.

சனாதன தர்மம் ஒழிய தமிழகத்தில் அத்தனை கட்சிகளுமே காரணம். அதேபோல இந்து அறநிலையத்துறை என்கிற அமைச்சரவையும் இருக்காது. இந்துசமய அறநிலையத்துறையின் கடைசிநாள், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாளாக இருக்கும். அன்று மருது பாண்டியர்களின் ஜம்பு தீவு பிரகடனம் போல இது என் மண் என் மக்கள் யாத்திரையின் பிரகடனம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

About neWsoFtTAmilNADu

Check Also

எடப்பாடி பழனிசாமியைஇழிவுபடுத்த நினைத்தால் தேவரே தண்டிப்பார்.. சாபம் விட்ட அதிமுக ஆர் பி.உதயக்குமார்

எடப்பாடி பழனிசாமியைஇழிவுபடுத்த நினைத்தால் தேவரே தண்டிப்பார்.. சாபம் விட்ட அதிமுக ஆர் பி.உதயக்குமார்.தேவரின் முகக் கவசத்தை அணிந்து கொண்டு எடப்பாடி …