பாஜகவுக்குக் கால் இருந்தால்தானே தமிழ்நாட்டில் கால் ஊன்றும்? அதிமுக
அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை!
அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்தாவிட்டால், அதிமுக பதிலடி கொடுக்கும். அண்ணாமலை தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்குக் கீழ் தான் வாக்குகள் வாங்குவார். கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மதிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.
பாஜகவுக்குக் காலே இல்லை; பிறகு எப்படி கால் ஊன்றும்? அதிமுகவுக்கு தேவையில்லாத சுமை பாஜக. பாஜக தேவையில்லை என கட்சித் தலைமை முடிவு செய்துவிட்டது என்று பாஜகவை சாடிய ஜெயக்குமார், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலை அரசியலுக்கே தகுதி இல்லாதவர்; பாஜக தலைவர் பதவிக்கும் தகுதி இல்லாதவர்; அண்ணாவை விமர்சித்த அண்ணாமலையை இனி ஏற்க முடியாது. சிங்கக் கூட்டத்தைப் பார்த்து சிறுநரி ஊளையிடுகிறது; அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் அண்ணாமலை மீது தாறுமாறாக விமர்சனங்கள் பறக்கும். அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தால், தேர்தலில் தொண்டர்கள் எப்படி பணியாற்றுவார்கள்?” என்று கூறினார்.
Check Also
பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:அண்ணாமலை
பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையை அகற்றுவோம்:இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காதுஅண்ணாமலை!ஶ்ரீரங்கம். நவ.09தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை “என் மண் …