பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் .2.5 கோடி வருவாய்.கோவில் நிர்வாகம் தகவல்.
பழனி டிச.20
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிநடைபெற்றது. இந்நிலையில் இன்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள்,வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 35லட்சத்து 19 ஆயிரத்து 429 வருவாய் கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 431 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்கத்திலான பொருட்கள் 474கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 9070கிலோ ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேலும் திருக்கோயில் சார்பில் நாளை உண்டியல் எண்ணும் பணி இல்லை என தகவல்.
Check Also
ராமர் கோவில் கும்பாபிஷேகம்அத்வானி வரவில்லை… காரணம் என்ன
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அத்வானி வரவில்லை… காரணம் என்ன?உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்டது. பிரதமர் …