Breaking News

பழங்கால விலை மதிபில்லாத பல கோடி ஐம்பொன் ஆளான ஸ்ரீ விளக்கு நாச்சியார் பெண் பாவை தெய்வம் சிலை காணவில்லை என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணனிடம் புகார் அளித்தனர்.

பழங்கால விலை மதிபில்லாத பல கோடி ஐம்பொன் ஆளான ஸ்ரீ விளக்கு நாச்சியார் பெண் பாவை தெய்வம் சிலை காணவில்லை என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணனிடம் புகார் அளித்தனர்.


நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், வடவத்தூர் பஞ்சாயத்தில் 2700 அடி உயரத்தில் அமைந்துள்ள தலைமலை ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலில் பழங்கால விலை மதிப்பில்லாத ஐம்பொன் ஆளான ஸ்ரீ விளக்கு நாச்சியார் பெண் பாவை தெய்வம் சிலை கடத்தப்பட்டது பற்றி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ராஜேஷ் கண்ணனிடம்
புகார் அளித்துள்ள விவரத்தினை இன்று நாமக்கலில் செய்தியாளர் சந்திப்பில் தலைமலை ஸ்ரீ சஞ்சீவப் பெருமாள் சேவா டிரஸ்ட் உறுப்பினர்கள் முன்னிலையில் கோவிலில் குடிப்பாட்டு பக்தர் கே செல்வகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது தமிழ்நாடு அரசும் தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலினும் இந்து சமய அறநிலையத்துறையும் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட உதவிட வேண்டு மென்றும்
காணாமல் போன சிலையை மீட்டு அதே இடத்தில் தமிழக அரசு வைக்க வேண்டும் என்றும் இது மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க இந்த தலைமலை ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலை முழுமையாக தமிழக அரசு இந்து சமய அறநிலை துறைக்கு எடுத்துக்கொண்டு உரிய பராமரிப்பு மற்றும் காவலர்களை நியமித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அப்போது அவர் வேண்டுகோள் வைத்தார்

மேலும் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். என்று நாமக்கல். தமிழன் பிரிண்டர்ஸ்
கே. செல்வகுமார் கேட்டுக்கொண்டார்

மேலும் அவர் கூறுகையில்
அருள்மிகு தலைமலை வெங்கடாஜலபதி திருக்கோவில் மற்றும்
உபக்கோவில்களில் பழமையான சிலைகள், கோபுர கலசங்கள்
இருக்குமிடம் தெரியாத நிலை இருக்கிறது இதன் மீதும் தக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் கோயிலின் உயர்ந்த கலசங்களும் இருக்கக்கூடிய பொருட்களும் இன்னும் உள்ளே இருக்கக்கூடிய பல்வேறு சிலைகளும் காணாமல் போயிருக்குமோ? என்ற அச்சம் இருக்கிறது ஆகவே தமிழக அரசும் இந்து அறநிலையத்துறையும் கோயிலுக்கான சொத்துக்களையும் சிலைகளையும் கலைபொருட்களைமும கோவில் ஆபரணங்களையும் ஒரே உரிய ஆய்வு செய்து கணக்கு எடுத்து அவைகள் இருக்கிறதா? என்பதையும் முறைப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வையும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்

மேலும் அருள்மிகு தலைமலை வெங்கடாஜலபதி கோவில் எங்களின் குடிபாட்டு கோவிலாகும். வருடத்தில் பல முறையாவது கோவிலுக்கு சென்று வருகிறோம்.

சில வருடங்களாக கோவில்களில் நடைபெறும் முறைகேடு மிகவும் மனவேதனையை தருகிறது. சிறப்பாக செயல்படும் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கோவிலில் விலை மதிக்கமுடியாத 50 கிலோ எடையுள்ள ஐம்பொன்னினால் ஆன பாவை விளக்கு என்கின்ற ஸ்ரீ விளக்கு நாச்சியார் பெண் தெய்வம் சிலையும் தற்போது கோவிலில் இல்லை.

அதற்கு பதிலாக 2 கிலோவிற்கு குறைவான மாற்று போலி சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல நூற்றாண்டு காலமாக இருந்த கோவில் கோபுர கலசம் இல்லை. இப்போது உள்ள ஸ்ரீ திருவிளக்கு பாவை நாச்சியார் சிலையானது போலியானதும் அளவிலும் , குறைவானது என்றும் குறிப்பாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலை இல்லை அது பித்தளை சேலை சிலை என்றும் அவர் தெரிவித்தவர்

இது சம்மந்தமாக ஆய்வு செய்து தவறு செய்த கோவில் பொறுப்பாளர்கள், பரம்பரை அறங்காவலர்கள் டி. நந்தகோபன், அவரது மகன் என். ககுமார், அறங்காவலர் ரங்கநாயகி மகன் நாராயணசாமி ஆகியோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.
என்று கே . செல்வகுமார் அந்த புகாரில் வேண்டுகோள் வைத்துள்ளார்

இது சம்பந்தமாக எருமைப்பட்டி சீனிவாசன் மற்றும் எருமைப்பட்டி பகுதியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர்களும் செய்தியாளருக்கு பேட்டி
அளித்தனர்

About neWsoFtTAmilNADu

Check Also

தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட  குடும்பப் பெண்கள்! நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே  தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் …