டேக்வாண்டோ போட்டியில்
பன்னிரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள்!!
மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான டேக்வாண்டோ போட்டிகள் மதுரை பரவை அருகே அமைந்துள்ள மங்கையற்கரசி கல்லூரியில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தான் நகரில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று பன்னிரண்டு தங்கப்பதக்கங்களும், நான்கு வெள்ளிப்பதக்கங்களும், இரண்டு வெண்கலப் பதக்கமும் வென்று மதுரை மாவட்டத்தில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டேக்வாண்டோ பயிற்சியாளர் திரு. மனோஜ் குமார் அவர்களையும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் தலைவர் முனைவர்.S.செந்தில்குமார் மற்றும் தாளாளர் திரு.V.குமரேஷ் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள்.