தூத்துக்குடி மாவட்டத்தில், மீட்பு – நிவாரணம் – சீரமைப்பு பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து தற்போது உள்ள சூழல் & அடுத்து மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – அரசு அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தின் போது, வெள்ளப்பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பை விரைந்து முடிக்கவும், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் – பயிர்ச்சேதம், முழுமையாகவும்
– பகுதியாகவும் இடிந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் ஆகியவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்குவது பற்றியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.
குறிப்பாக, மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளின் போது பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தொகுத்து முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வது, மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை தூர் வாருவது பற்றியும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.
Check Also
சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம்.நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது …