Breaking News

நள்ளிரவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தால் அனைத்து ரயில்களும் தாமதம்!

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே நள்ளிரவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தால் தாமதமாக சென்ற ரயில்கள்!

சென்னை:

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் கவிழ்ந்தன. 5க்கும் மேற்பட்ட இடங்களில் தண்டவாளங்கள் துண்டு துண்டாக உடைந்தன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மிகப் பெரிய இரும்பு ராடுகளை 43 வேகன்களில் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே வந்தது. அங்கு, தண்டவாள பகுதிகள் மூன்றாக பிரியும் இடத்தில் சரக்கு ரயில் வந்தபோது, வேகன்களில் இருந்த மிகப்பெரிய இரும்பு ராடுகளின் பாரம் தாங்காமல், 5க்கும் மேற்பட்ட இடங்களில் தண்டவாளங்கள் துண்டு துண்டாக உடைந்தன. இதனால், சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டன. உடனடியாக, டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். பின்னர், செங்கல்பட்டு ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து, ரயில்வே பொறியாளர்கள், போலீசார் மற்றும் தாம்பரம் ரயில்நிலைய அதிகாரிகள் விரைந்து வந்தனர். அங்கு சரக்கு ரயில் தடம் புரண்ட பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது, சரக்கு ரயில் பெட்டிகளில் அதிக பாரம் ஏற்றி வந்ததால், தண்டவாளம் பிரியும் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு துண்டு துண்டாக உடைந்து, பெட்டிகள் கவிழ்ந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, பெட்டிகளை மீட்கும் பணிகள் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடந்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரக்கு ரயில் பெட்டிகளை மீட்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை நேற்று காலை நிறுத்தப்பட்டு, சிங்க பெருமாள்கோவில் வரை இயக்கப்பட்டது. இதனால் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்ல வேண்டிய ரயில் பயணிகள் சிங்க பெருமாள்கோவில் வரை பல்வேறு வாகனங்களில் வந்து, அங்கிருந்து மின்சார ரயில்கள் மூலம் சென்னைக்கு சென்றனர். திருமால்பூர், காஞ்சிபுரம் மின்சார ரயில்கள் மட்டும் சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்டது. செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்லக்கூடிய பயணிகள், தென் மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரம், முத்துநகர், அனந்தபுரி விரைவு ரயில்களில் தாம்பரம், எழும்பூர் செல்வதற்காக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் போட்டிப்போட்டு ஏறினர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சி உள்பட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே விபத்து நடந்த இடத்தில் மெதுவாக இயக்கப்பட்டன. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தடைபட்டது. இதனால் சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. உடைந்த தண்டவாளங்களை சரிசெய்யும் பணி, தடம் புரண்ட சரக்கு ரயிலை மீட்கும் பணியில் 500 ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து ரெக்கவரி ரயில் வரவழைக்கப்பட்டு உடைந்த தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டன. சேதமடைந்த கான்கிரீட் தூண்கள் புதிதாக மாற்றப்பட்டது. தடம்புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள் பாதுகாப்பாக கழற்றி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

About neWsoFtTAmilNADu

Check Also

உங்கள் பெயரில் உள்ள ரயில் டிக்கெட்டில் உங்கள் உறவினர்கள் பயணிக்கலாம்! ஐ ஆர் டி சி அறிவிப்பு!

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக ஒரு பெரிய விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் பயனளிக்கும் விதிமுறையாகும். பயணிகள் தங்களுடைய …